விமான சேவை..
இன்று நள்ளிரவு முதல் 31 ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து விமானச் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வறிவித்தலை சிவில் விமானச் சேவைகள் அதிகார சபை வெளியிட்டுள்ளது.
கோவிட் தொற்றைக் கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சபை தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கையிலிருந்து பயணிக்க இருக்கும் பயணிகளுக்கு எந்தவித தடையுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சரக்கு விமானிகளுக்கு அனுமதியுள்ளதாக அச்சபை தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 31 ஆம் திகதி நள்ளிரவு வரை இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.