வானும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் பரிதாபமாக பலி!!

909

விபத்து..

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியின் 99ஆம் கட்டை பகுதியில் வான் மற்றும் லொறியொன்று நேருக்கு நேர் மோதியதில் வானில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (22.05) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் வானில் பயணித்த திருகோணமலை, கோட்டை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தம்பலகாமம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்த நபரின் சடலம் தற்போது தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.