உரப்பைக்குள் மயங்கிய நிலையில் கிடந்த இளைஞன்!!

1386

உரப்பைக்குள்..

உரப்பைக்குள் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட இளைஞர் ஒருவர் இன்று காலை தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த இளைஞர் தம்புள்ளை நகரில் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு எதிரில் உரப்பை ஒன்றுக்குள் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

உரப்பைக்குள் நபர் ஒருவர் இருப்பதை அருகிலிருந்தவர்கள் கண்டு, அது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து நகர வாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து இளைஞனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞன் குருணாகல் மாவத்தகமை பிரதேசத்தைச் சேர்ந்த காமினி திஸாநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் எதற்காக தம்புள்ளை நகருக்குச் சென்றார், ஏதேனும் பிரச்சினையில் சிக்கியுள்ளாரா என்ற எந்த தகவல்களும் இதுவரை தெரியவரவில்லை.