இந்தியாவில்..
வசதியான இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி அடுத்தடுத்து 4 திருமணங்கள் செய்து கொண்ட தெலங்கானா காவல்துறை, பெண் தலைமைக் காவலர் போலீசில் சி.க்கியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆ.யு.த.ப்படை பிரிவில் தலைமை காவலராக பணியாற்றுபவர் 30 வயதான சந்தியா ராணி. இவர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2வது திருமணம் செய்து கொண்டார்.
2வது கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில், அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார். அவருடன் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 3வதாக வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். சில மாதங்களில் அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு சந்தியாராணி ஹைதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த சரண்தேஜ் என்பவரை காதல் வலையில் விழவைத்தார். சந்தியாராணியுடன் சில மாதங்கள் பழகியதில், அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருப்பதும், பல ஆண்களை திருமணம் செய்து ஏ.மாற்றியதும் சரண்தேஜிற்கு தெரியவந்தது.
இதனால் அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். ஆனால் திருமணம் செய்ய மறுத்தால் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமுகவலைதளங்களில் வெளியிடுவேன் என்று சந்தியாராணி மி.ர.ட்டியுள்ளார். இதனால் பயந்து போன சரண்தேஜ் சந்தியாராணியை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிய சந்தியாராணி, நீ வேலையை விட்டு விட வேண்டும் என்றும், என்னுடைய மதமான கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும் என்றும் வ.ற்புறுத்தியுள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த சரண்தேஜை பூட்டிய அறைக்குள் வைத்து அ.டி.த்.து சி.த்.ர.வ.தை செ.ய்துள்ளார் சந்தியாராணி. இது குறித்து சரண்தேஜ், ஹைதராபாத் காவல்துறை ஆணையருக்கும், செம்ஷாபாத் காவல்நிலைய வாட்ஸ்ஆப் எண்ணிற்கும் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தியாராணியை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று வி.சாரித்தனர். வி.சாரணையில் சந்தியாராணி வசதியாக இருக்கும் ஆண்களை குறிவைத்து காதல் வலையில் வீழ்த்தி அடுத்தடுத்து 4 திருமணங்களை செய்து கொண்டது தெரியவந்தது.
முதல் 2 கணவர்கள் விட்டால் போதும் என விவகாரத்து பெற்றுக் கொண்டு ஓடிவிட்டனர். 3வது கணவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட நிலையில். நான்காவதாக வலையில் வீழ்ந்த சரண்தேஜ் உதவிக்கு போலீசார் துணையை நாடியுள்ளார்.
சந்தியாராணியிடம் இருந்து விடுதலை பெறுவது தனக்கு முக்கியம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள சரண்தேஜ், அவரைப் போன்ற மோ.சடிக்காரர்கள் நாட்டில் நடமாடக் கூடாது என்று ஆவேசத்துடன் குறிப்பிட்டுள்ளார். அவரைப் பற்றி உண்மை உலகிற்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே தான் போலீசில் புகார் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையில் பணியாற்றும் பெண் அடுத்தடுத்து நான்கு திருமணங்களை செய்து கணவர்களை கொ.டு.மை.ப்படுத்தி கைதாகியிருப்பது தெலங்கானாவில் பெரும் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது.