தொற்று நீக்கும் செயற்பாடு..
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியா நகரசபையினரினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் வவுனியா நகரசபை தவிசாளரின் ஆலோசனைக்கமைய நகரசபை பொது முகாமைத்துவ உதவியாளர் துரைராஜ் சபேசன் தலைமையில் வவுனியா நகரின் முக்கிய பகுதிகளில் இன்று (23.05.2021) தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
பழைய பேரூந்து நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், நகர வர்த்தக நிலைய முன்றல், நடைபாதைகள் ஆகியன தொற்று நீக்கம் செய்யப்பட்டதுடன் ஊடகவியலாளர்களின் மோட்டார் சைக்கிள்களும் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.