2வது நாளாகவும் முடக்கம்..
வவுனியா மாவட்டம் இரண்டாவது நாளாகவும் முடங்கியுள்ள நிலையில், அரசாங்கத்தின் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயற்படுவர்கள் மீது பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் நாடு முழுவதும் முழுமையான பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மருத்தகங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டாவது நாளாகவும் வவுனியா மாவட்டம் முழுமையாக மக்கள் நடமாட்டம் இன்றி முடங்கிக் காணப்படுவதுடன், மருந்தகங்கள் மாத்திரம் திறக்கப்பட்டுள்ளன.
மக்களுக்கான தேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்தின் முழுமையான பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி பலரும் மருந்தகங்களுக்கு செல்வதாகவும்,
அரச உத்தியோகத்தர்கள் பலர் தமது உத்தியோக அடையாள அட்டையை காண்பித்தும் வீதிகளில் சென்று வரும் நிலையில் பொலிசார் அவர்களை மறித்து தேவையின்றி வீதிகளில் செல்பவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கி திருப்பி அனுப்பி வருகின்றனர்.
வவுனியா நரம் மற்றும் அண்மித்த பகுதிகளில் பொலிசார் கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன் வீதிகளில் செல்வோர் வழிமறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.