பயணத்தடை நீக்கப்பட்டாலும் மக்களை வீடுகளில் இருக்குமாறு இராணுவத் தளபதி அறிவிப்பு!!

1115

பயணத்தடை…

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 25ஆம் திகதி சில மணித்தியாலங்களுக்கு தளர்த்தப்படும் என இராணுவ தளபதி சவேசந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்போது அருகிலுள்ள கடைகளுக்கு மட்டுமே சென்று அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து விட்டு உடனே வீடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என இராணுவத் தளபதி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வாரம் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள முடியாதவர்களுக்கே இப் பயணத்தடை நீக்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 25ம் திகதி அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.