பளையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!!

1421

பளையில்..

பச்சிலைப்பள்ளி பளை தம்பலகாமம் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் இன்று (23.05.2021) அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றைய தினம் இவ்விடத்தில் காணாமல் போன 44 வயதுடைய பெண்ணினுடையது எனத் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணை நேற்றைய தினம் காணாமல் உறவினர்கள் தேடி அலைந்த நிலையில், இன்று தம்பலகாமம் குளிர் பகுதியில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில், தீவிர விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் சடலம் திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் நீதிபதி ஆகியோர் விசாரணைகள் நிறைவடைந்த பின் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.