கொரோனா..
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (23.05) இரவு வெளியாகின.
அதில் நெடுங்கேணி பிரதேச சபை தவிசாளருக்கும், சிறைச்சாலை உத்தியோகத்தர் இருவருக்கும், பூனாவ நவகம பகுதியை சேர்ந்த வவுனியா பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும், சிறைச்சாலை கைதி ஒருவருக்கும்,
வேப்பங்குளம் 7ம் ஒழுங்கை பகுதியில் ஒருவருக்கும், எருக்களங்கல் பகுதியில் ஒருவருக்கும், இராசேந்திரகுளம் ஆடைத்தொழிச்சாலையில் ஒருவருக்கும் என 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.