இலங்கை முழுவதும் பயண கட்டுப்பாடு ஜுன் மாதம் 7ம் திகதிவரை நீடிப்பு!!

4549

பயண கட்டுப்பாடு…

நாட்டில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை, நாளை அதிகாலை தளர்த்தப்பட்டாலும், இந்த பயணத் தடை எதிர்வரும் 7ம் திகதி வரை அமலில் இருக்கும் என அரசாங்கம் சற்று முன்னர் அறிவித்தது.

மீண்டும் நாளைய தினம் (25.05.2021) இரவு 11 மணி முதல் அமல்படுத்தப்படுகின்ற பயணத் தடை எதிர்வரும் 31ம் திகதி அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதேபோன்று, 31ம் திகதி இரவு 11 மணிக்கு அமல்படுத்தப்படும் பயணத் தடை எதிர்வரும் மாதம் 4ம் திகதி அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4ம் திகதி இரவு 11 மணிக்கு மீண்டும் பயணத் தடை விதிக்கப்பட்டு, எதிர்வரும் 7ம் திகதி அதிகாலை 4 மணி வரை இந்த பயணத் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது நாட்டில் அமலில் உள்ள பயணத் தடை நாளை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டாலும், எதிர்வரும் 7ம் திகதி வரை இந்த பயணத் தடை தொடரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 25, 30 மற்றும் 04ம் திகதிகளில் மாத்திரமே பயணத் தடை தளர்த்தப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார். இதே வேளை நாளைய தினம் வாகனங்களில் பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.