குதிரையின் இறுதிச்சடங்கில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் : கொரோனா ஊரடங்கில் அதிர்ச்சி!!

718

இந்தியாவில்..

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் குதிரை ஒன்றின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் பல ஊர்களில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு காரணமாக மக்கள் அதிகளவில் ஒன்று கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் குதிரை ஒன்றின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றது தொற்று பரவும் அச்சத்துக்கு வழிவகுத்துள்ளது.

பெலகாவி மாவட்டம் மரடிமத் (Maradimath)கிராமத்தில் மத அமைப்பை சேர்ந்த குதிரை ஒன்று நேற்று காலை உயிரிழந்தது.

இதனையறிந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள், குதிரையின் இறுதி ஊர்வலத்தில் சாரை சாரையாக பங்கேற்றனர்.

ஊரடங்கை மீறியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மரடிமத் கிராமத்திற்கு சீல் வைத்தனர். தொடர்ந்து அந்த கிராமத்திலுள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.