சிறிய கிரகமான புதன் மேலும் சுருங்குகிறது : அதிர்ச்சியில் நாசா!!

504

Mercury

சூரியனைச் சுற்றி வரும் 9 கோள்களில் முதல் கோளாகவும், மிகச் சிறிய கோளாகவும் விளங்கும் புதன் கிரகம், கடந்த 4 கோடி ஆண்டுகளில் 8.6 மைல் அளவுக்கு அதன் விட்டம் சுருங்கி உள்ளதாக நாசாவின் ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது.

பாறைகளால் ஆன புதன் கிரகத்தில் பகல் மூன்று மாதமும், இரவு மூன்று மாதமும் இருக்கும். புதன் கிரகத்தில் பகலில் வெயில் 400 டிகிரி செல்சியசில் இருக்கும். இரவாக உள்ள பகுதியில் குளிர் ஆளைக் கொன்று விடும். மைனஸ் 173 டிகிரியாக இருக்கும். புதன் கிரகத்தில் செடி, கொடி, மரம என எதுவும் இல்லை. எந்த உயிரினமும் வாழும் சூழ்நிலையும் இல்லை.

அமெரிக்கவின் நாஸா விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 2004 ஆம் ஆண்டில் அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் 2008 ஆம் ஆண்டுகளில் புதன் கிரகத்தை அடைந்து அப்போதிலிருந்து அக்கிரகத்தை ஆராய்ந்து அரிய தகவல்களை அனுப்பி வருகிறது. மெசஞ்சர் அனுப்பிய புகைப்படங்களை ஆராய்ந்த ஆய்வாளர்கள் புதன் கிரகம் கடந்த 4 கோடி ஆண்டுகளில் 8.6 மைல் அளவுக்கு அதன் விட்டம் சுருங்கி உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.