கோச்சடையான் ரிலீஸ் நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வெள்ளி நாணயம் பரிசு!!

511

Kochdayanதமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் ஆர்.வி குமாரசாமி திருமணமண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு எஸ்.எஸ்.முருகேஷ் தலைமை தாங்கினார், கௌரிகனகு, மாரிமுத்து முன்னிலை வகித்தனர். நடராஜ் வரவேற்று பேசினார். தெற்கு மாவட்ட தலைவர் செல்வம், செயலாளர் கார்த்தி, பொருளாளர் நாகேந்திரன், வடக்கு மாவட்ட தலைவர் தென்றல் செயலாளர் சுதாகர், பொருளாளர் தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் காந்தி வேடம், ரஜினி வேடம் அணிந்து மேடையில் தொண்டர்கள் தோன்றினர். 200க்கும் மேற்பட்டவர்கள் முகத்தில் ரஜினியின் மாஸ்க் அணிந்திருந்தனர். கூட்டத்தில் கோச்சடையான் திரைப்படத்தை வரவேற்கும் வகையில் பிரமாண்டமான ரதம் தயாரித்து அதை தமிழகம் முழுவதும் பவனி வர செய்து கோச்சடையான் திரைப்படத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.

திரைப்படம் வெளிவரும் அன்று திருப்பூர் அரசு மருத்துவ மனையில் பிறக்கும் ஆண், பெண் குழந்தைகளுக்கு ரஜினிகாந்த் படம் பொறித்த வெள்ளி நாணயங்களை வழங்குவது. கோச்சடையான் திருட்டு சி.டி வெளிவராமல் தடுக்க ஆண், பெண் கொண்ட திருப்பூர் மாவட்டம் முழுவதும் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. கலைமணி நன்றி கூறினார்.