அட்டைப்பெட்டியில் வைத்து அநாதரவாக விடப்பட்ட கு.ழந்தை : 32 வருடங்களுக்குப் பின் கிடைத்த இன்ப அ.திர்ச்சி!!

1904

பிரித்தானிய…

நடுங்கவைக்கும் குளிரில், பிரித்தானிய மருத்துவமனை ஒன்றின் முன் அட்டைப்பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த கு.ழந்தை ஒன்றைக் கண்டார்கள் அந்த மருத்துவமனை ஊழியர்கள்.

Chesterfieldஇல் உள்ள அந்த மருத்துவமனையில் பணிபுரியும் Daphne, Susan மற்றும் Gill என்ற மூன்று செவிலியர்கள் அந்த கு.ழந்தையை தங்கள் பொறுப்பில் எடுத்து கருத்தாய் கவனித்துக்கொண்டார்கள்.

இதற்கிடையில், இப்படி ஒரு கு.ழந்தை பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில் அநாதரவாக விடப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்ட ஒரு தம்பதியர், ஓடோடி வந்து அதை தங்கள் கு.ழந்தையாக தத்தெடுத்துக்கொண்டார்கள்.

அவர்களது அன்பில் திக்குமுக்காடி வளர்ந்ததால் வேறு யாரையும் அதிகம் தே.டவேண்டிய ஒரு சூழல் Helen Knox என்ற அந்த கு.ழந்தைக்கு வரவில்லை என்றாலும், தற்போது 32 வயதாகும் நிலையில், தன்னுடைய இ.ரத்த சம்பந்தமான உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது அவருக்கு.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் உதவியுடன் DNA சோதனை மூலம் ஆராய்ந்தபோது, Helenக்கு ஒரு அக்கா இருப்பது தெரியவந்தது. இதில் சோ.கம் என்னவென்றால், Jess என்ற அந்த பெண்ணும், 14 மாதக் கு.ழந்தையாக ரோட்டோரம் விடப்பட்டிருந்தார் என தெரியவந்ததுதான்.

சோ.கத்திலும் ஒரு சுகம் என்பார்கள், அதுபோல, இருவருமே கைவிடப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் இருவராலும் ஒருவரது உணர்வுகளை மற்றவரால் நன்றாக புரிந்துகொள்ளமுடிகிறது. சமீபத்தில், கொரோனா பரிசோதனைகளுக்குப் பின், பா.துகாப்பான ஒரு மருத்துவமனையில் சகோதரிகள் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள்.

இத்தனை வருடங்களாக தனக்கு உறவென்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை என்று எண்ணிக்கொண்டிருந்த நிலையில், தனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் என்ற மகிழ்ச்சியும், இத்தனை வருடங்கள் சந்திக்காமல் இருந்துவிட்டோமே என்ற ஆதங்கமும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட,

உணர்ச்சி மிகுதியால் இருவரும் கண்களில் நீர் து.ளிர்க்க ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ’பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ’ என்றொரு வாக்கியம் கம்பராமாயணத்தில் வரும்.

அதுபோல, அக்கா தங்கையின் கண்களிலிருந்து வரும் க.ண்ணீரே அவ்வளவு உணர்வுகளையும் கொ.ட்டிவிடுகிறது. இது ஒரு நாள் நிகழ்வல்ல, இனி எங்கள் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கக்கூடியது என்று நினைக்கும்போது உள்ளம் துள்ளுகிறது என்கிறார் Helen.

சகோதரிகளின் குடும்பங்கள் சந்தித்துக்கொண்ட நிலையில், பின்னர், Helenஐ கவனித்துக்கொண்ட அந்த செவிலியர்களையும் சகோதரிகள் சந்தித்துள்ளார்கள்.

இதற்கிடையில், சகோதரிகளின் தாயையும் அந்த தொலைக்காட்சி குழு க.ண்டுபிடித்துவிட்டது. ஆனால், அந்த பெண் தன் பிள்ளைகளை சந்திக்கும் மன நிலையில் இருப்பாரா என்பது தெரியாததால், அவரை உடனே சென்று அணுகாமல் காத்திருக்கிறது தொலைக்காட்சிக் குழு.