கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இளம் பிரித்தானிய மொடல் : கோமா நிலைக்கு சென்று மரணம்!!

591


இளம் மொடல்…


பிரித்தானிய இளம் மொடல் ஒருவர், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டதைத் தொடர்ந்து மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு உ.யிரிழந்துள்ளார்.பிரித்தானிய மொடலான Stephanie Dubois (39), சைப்ரஸ் தீவில் வாழ்ந்துவந்தார். இம்மாதம் (மே மாதம்) 6ஆம் திகதி Stephanie ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.


அதைத்தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட Stephanie, மே 14ஆம் திகதி, உடல் முழுவதும் நடுங்குவதாகவும், மூட்டுக்களை அசைக்கமுடியவில்லை என்றும், தலை சுற்றல் இருப்பதாகவும், தலை வலி இருப்பதாகவும், மூச்சுவிட கஷ்டமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.


ஒருவேளை தனக்கு கொரோனா தொற்றியிருக்குமோ என்று எண்ணி, கொரோனா பரிசோதனை செய்தபோது, பரிசோதனை முடிவுகள் அவருக்கு கொரோனா இல்லை என்றே கூறின.

பின்னர், மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு கோமாவுக்குச் சென்ற Stephanie, கடந்த சனிக்கிழமை உயிரிழந்துவிட்டார். இளம் மொடலான Stephanieயின் திடீர் மரணத்தால் அவரது நண்பர்கள், சக மொடல்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இத்ற்கிடையில், Stephanieயின் உயிரிழப்புக்குக் காரணம் ஆஸ்ட்ராசெனகா தடுப்புசிதானா என்பதைக் கண்டறிய சைப்ரஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளனர்.