இலங்கையில் பயணத்தடை தொடர்பில் புதிய மாற்றங்களுடன் இன்று முக்கிய அறிவிப்பு!!

4776

பயணத்தடை..

கொரோனா பரவல் நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடு முறைமையில் புதிய மாற்றங்களை அரசு இன்று அறிவிக்கவுள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் கோவிட் தடுப்புச் செயலணியின் விசேட கூட்டமொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் பின்னர் விசேட அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. இப்போதுள்ள பயணத்தடை நிறைவடையவுள்ள திகதிகளில் மாற்றங்கள் செய்யப்படலாமென சொல்லப்பட்டது.

ஏற்கனவே கடந்த 25ஆம் திகதி பயணத்தடையில் தளர்வு கடைப்பிடிக்கப்பட்ட போது மக்கள் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டதால் இனி மக்கள் பாதிக்காத ஏற்பாடுகளை செய்து தொடர் பயணத்தடையை அமுல்படுத்த அரச மேல்மட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது.