31ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட மாட்டாது : 7ம் திகதிவரை நீடிப்பு : இராணுவ தளபதி அறிவிப்பு!!

2991

பயணக்கட்டுப்பாடு..

தற்போது அமுலில் உள்ள பயண கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கொவிட் தடுப்பு தேசிய செயலணி உறுப்பினர்களும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 4 ஆம்திகதிகளில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படாமல், தொடர்ந்தும் ஜூன் 7 ஆம்திகதிவரை நீடிக்கும் என இராணுவ தளபதி தெரிவித்தார்.

நடமாட்டக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் மாவட்ட அரசாங்க அதிபர்களின் ஏற்பாட்டில் வாகனங்கள் ஊடாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.