வவுனியா பொலிஸ் நிலையத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!!

1160

தொற்று நீக்கும் செயற்பாடு..

வவுனியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று (28.05) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிசார் சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 8 பொலிசார் இரு தினங்களில் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில், பொலிஸ் நிலையத்தின் அனைத்து பிரிவுகளிலும், பொலிஸ் விடுதிகளிலும் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா நகரசபை தவிசாளரின் ஆலோசனைக்கமைய நகரசபை பொது முகாமைத்துவ உதவியாளர் துரைராஜா சபேசன் தலைமையில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றத்தடுப்பு பிரிவு,

குற்றத்தடுப்பு பிரிவு, சிறுவர் பெண்கள் பிரிவு, சமூக நல்லுறவுப் பிரிவு, ம.து ஒழிப்பு பிரிவு, போக்குவரத்துப் பிரிவு, கேட்போர் கூடம், பொலிஸ் பொறுப்பதிகாரி அலுவலகம், பொலிஸ் சிறைக் கூடம்,

பொலிஸ் வாளாகம், பொலிசாரின் வாகனங்கள் என்பவற்றுக்கு தொற்று நீக்கும் மருந்துகள் விசிறப்பட்டு தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.