ஜுன் 8ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுகிறதா? வெளியான தகவல்!!

15304

பயணக்கட்டுப்பாடு..

ஜூன் 7ம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது மக்களின் நடத்தையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை பொது மக்கள் கடைப்பிடித்து, பொறுப்புடன் நடந்து கொண்டால், ஜூன் 8 ஆம் திகதி கட்டுப்பாடுகளை நீக்க முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். ஜூன் 7 ஆம் திகதி வரை பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.