வவுனியாவில் வர்த்தகர்கள் மற்றும் மரக்கறி விற்பனையாளர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை!!

2091

அன்டிஜன் பரிசோதனை…

வவுனியாவில் பயணத்தடை காலத்தில் அத்தியாவசிய பொருட்களை வழங்க அனுமதியளிக்கப்பட்ட வர்த்தகர்கள், மரக்கறி விற்பனையாளர்கள் மற்றும் வாகன சாரதிகளுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று காலை (29.05) சுகாதார பிரிவினரால் இப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

கொவிட் 19 இன் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே வழங்க கிராம மட்டத்தில் இருந்து நகரம் வரை சில வர்த்தக நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களைச் சேர்ந்தோர், மரக்கறி விற்பனையாளர்கள், அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் சாரதிகள் ஆகியோருக்கு கொவிட் தொற்று தொடர்பான அன்டிஜன் பரிசோதனையே இவ்வாறு முன்னெடுக்கப்பட்டிருந்தது.