வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு, சிவகார்த்திகேயன் தண்ணிகாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அதன் ஒரு அங்கமாக பிரபல நட்சத்திரங்கள் கூறுவதுபோல் பைட் எடுத்து அவற்றை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பத் திட்டமிட்டது.
இதற்காக பல முன்னணி நட்சத்திரங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அணுகியிருக்கிறார்கள்.
இதை ஒரு சமூகக்கடமையாக நினைத்த நட்சத்திரங்கள் பலரும் தானாகவே முன்வந்து தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதன்படி பைட் கொடுத்திருக்கின்றனர்.
உலக நாயகன் கமல் கூட அத்தனை பிஸியிலும் தேர்தல் அதிகாரிகளை மதித்து பேட்டி கொடுத்து வழியனுப்பி இருக்கிறார்.
ஆனால், இது சம்மந்தமாக தேர்தல் அதிகாரிகள் சிவகார்த்திகேயனை அணுகியபோது, நான் ரொம்ப பிஸி என்று சொல்லியதோடு, என்கிட்ட நேரடியாக பேசமுடியாது என் மேனேஜரைப் பாருங்க, மாலை வாங்க, நாளை பார்க்கலாம் என்று பயங்கர பில்ட் அப் கொடுத்து அலற வைத்துள்ளார்.
மேலும் அவர் கடைசிவரை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பே தரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.