வவுனியாவில் அனுமதியின்றி திறக்கப்பட்ட இரு வர்த்தக நிலையங்கள் பொலிசாரால் பூட்டு!!

4812

வர்த்தக நிலையங்கள்…

வவுனியாவில் அனுமதியின்றி திறக்கப்பட்ட இரு வர்த்தக நிலையங்கள் பொலிசாரால் இன்று (30.05) காலை பூட்டப்பட்டன.

வவுனியா சந்தை உள்ளவட்ட வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பயணக்கட்டுப்பாட்டு நேரத்தில் வர்த்தக நிலையத்தை திறந்து வியாபாரம் இடம்பெற்றுள்ளது.

இங்கு பொதுமக்கள் பொருட்களை பெற்றுச் செல்வது தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து பிரதேச செயலகத்தினர் அங்கு சென்று பார்வையிட்டனர். இதன்போது அனுமதி பெறாது வியாபாரம் செய்தமை தெரியவந்தது.

இதனையடுத்து பிரதேச செயலாளரால் வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தியதையடுத்து குறித்த வர்த்தக நிலையத்திற்கு வருகைதந்த பொலிசார் வர்த்த நிலையத்தினருக்கு கடும் எச்சரிக்கை வழங்கியதுடன் வர்த்தக நிலையத்தை பூட்டுமாறும் பணித்திருந்தனர்.

அத்துடன் மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல சுப்பர் மார்கட் ஒன்று பயணக்கட்டுப்பாட்டு நேரத்தில் வீடு வீடாக சென்று பொருட்களை வழங்குவதற்கான அனுமதியைப் பெற்று வர்த்தக நிலையத்தை திறந்து வியாபாரம் செய்வதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து,

அங்கு சென்ற பிரதேச செயலாளர் குறித்த வர்த்தக நிலையத்த பூட்டுமாறு பணித்ததுடன் பயணக்கட்டுபாட்டு நேரத்தில் வீடுகளுக்கு சென்று பொருட்களை வழங்குவதற்காக பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.