வவுனியாவில் கொரோனா தொற்றால் முஸ்லிம் பெண் மரணம் : அடக்கத்திற்காக சடலம் ஓட்டமாவடிக்கு அனுப்பி வைப்பு!!

3262


கொரோனா தொற்றால்..


வவுனியாவில் கொரோனா தொற்று மரணமடைந்த முஸ்லிம் பெண்ணின் உடல் அடக்கத்திற்காக மட்டக்களப்பு, ஓட்டமாவடிக்கு அனுப்பி இன்று (31.05) வைக்கப்பட்டுள்ளது.வவுனியாஇ அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த 52 வயது பெண் ஒருவர் சுகயீனம் காரணமாக சனிக்கிழமை (30.05) இரவு அவரது வீட்டில் மரணமடைந்தார்.


குறித்த பெண்ணின் உடல் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரது உடலில் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் குறித்த பெண்ணிற்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று இரவு (31.05) உறுதி செய்யப்படது.


இதனையடுத்து, குறித்த பெண்ணின் உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் சுகாதார பிரிவினரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

இதனையடுத்து சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு, ஓட்டமாவடியில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதற்காக குறித்த பெண்ணின் உடல் சுகாதார நடைமுறைகளுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து இன்று (31.05) மதியம் இராணுவ பாதுகாப்புடன் சுகாதார பிரிவினரால் மட்டக்களப்பு, ஓட்டமாவடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.