வவுனியாவில் பயணத்தடையை மீறி நடமாடுவோரை ட்ரோன் கமரா மூலம் கண்காணிக்கும் இராணுவத்தினர்!!

1631


ட்ரோன் கமரா…


இராணுவத்தின் வன்னிப் படைத் தலைமையாகத்தால் வவுனியாவில் ட்ரோன் கமரா மூலம் கண்காணிக்கும் நடவடிக்கை இன்று (31.05) மதியம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.வவுனியா பழைய பேரூந்து நிலையில் வைத்து இராணுவத்தால் ட்ரோன் கமரா பறக்கவிடப்பட்டதுடன், இதன்போது நகரப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டன.


அத்துடன், மோட்டார் சைக்கிள்களில் வந்த இராணுவ அணியினர் பயணக்கட்டுப்பாட்டு நடைமுறைகளை மீறி நடமாடியவர்களை இனங்கண்டு அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கி அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பியிருந்தனர்.


இதேவேளை, வவுனியா நகரப்பகுதியில் நேற்றைய தினம் (30.05) மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகிய நிலையில்,

நகரப் பகுதி இராணுவத்தின் ட்ரோன் கமராவின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வீதிகளில் நடமாடியவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டு திருப்பி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.