15 வயது சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய 64 வயது நபர் கைது!!

551

abuseமாரவில பிரதேசத்தில் 15 வயதான சிறுமி ஒருவரை பாலியல் பாலத்காரத்திற்கு உட்படுத்திய 64 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நாத்தண்டிய, மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி இந்த பலாத்கார சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த வருடம் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதியே பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த முறைப்பாட்டின் படி பொலிஸாரினால், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைகளுக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது சிறுமி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை வைத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் அயல்வீட்டுக்காரரே சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளமை பொலிஸாரது முதற்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற நாளன்று சிறுமி தனது தயாருடன் சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். தாய் வீடு திரும்பியபோதும் சிறுமி அந்நபரின் வீட்டிலேயே தங்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் மாரவில மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.