வவுனியாவில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு!!

2406


கொரோனா தடுப்பூசி…


வவுனியா மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இன்று (31.05) முன்னெடுக்கப்பட்டது. சுகாதாரத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு வவுனியா வைத்தியசாலையில் வைத்து இத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலையில் அஸ்ராசெனிக்கா தடுப்பூசியில் முதலாவது டோஸ் பெற்றவர்களுக்கு, இதன்போது இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்டதுடன்,


சீன அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட சினோபாம் கொரோனா தடுப்பூசிகளும் முதன் முறையாக தடுப்பூசி போடுபவர்களுக்கு ஏற்றப்பட்டன.


இதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக சுகாதார துறையுடன் தொடர்புடையவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.