கொரோனா தொற்று அறிகுறிகளுடன் பரவும் டெங்கு நோய் : இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!!

1285

டெங்கு நோய்..

சில கொரோனா தொற்று அறிகுறிகள் டெங்கு நோய் தொற்றிற்கு சமமானதாக உள்ளதென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நோய் நிலைமை ஒன்று ஏற்பட்டால் வீட்டில் இருந்து ஆராயாமல் வைத்திய ஆலோசனைகளை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு தேசிய டெங்கு தடுப்பு பிரிவு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் வீரசிங்க, காய்ச்சல் மற்றும் உடல் வலி டெங்கு மற்றும் கொவிட் ஆகிய இரண்டு நோய்களும் காண கூடிய அடையாளங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட வைத்தியர் இந்திக்க விரசிங்க “வீட்டில் காய்ச்சல் ஏற்பட்டால் எனக்கு ஏற்பட்டது டெங்கு காய்ச்சலா? சாதாரண வைரஸ் காய்ச்சலா அல்லது கொவிட் தொற்றா என தீர்மானிப்பது நல்லதல்ல.

நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக வைத்தியரிடம் அல்லது வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டும். ஒரு நோய் அறிகுறி உள்ளவருக்கு வேறு ஏதாவது நோய்கள் இருப்பின் அது ஆபத்தான நிலைமைக்கு கொண்டு செல்ல கூடும். இதனால் கொவிட் தொற்றாளர் ஒருவருக்கு டெங்கு நோய் தொற்றினால் ஆபத்து அதிகமாகிவிடும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.