போலி ஆவணங்களை சமர்ப்பித்து கொழும்பு வந்தால் 5 ஆண்டுகள் சிறை!!

1423

5 ஆண்டுகள் சிறை…

போலி ஆவணங்களை சமர்ப்பித்து கொழும்பிற்குள் பிரவேசித்தால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயணத் தடை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி கொழும்பு நகரிற்குள் பிரவேசிக்கும் நபர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுண்டு என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவ்வாறு தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக ஐம்பதாயிரம் ரூபா வரையில் அபராதம் விதிக்கப்பட முடியும் என குறிப்பிடுகின்றனர்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடந்த நேற்று முன்தினம் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொழும்பு நகரிற்குள் பிரவேசித்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-