வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய கல்வி சமூக அபிவிருத்தி நிதியம் ஊடாக உதவிகள்!!

1718

உதவிகள்..

இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் நாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

வவுனியாவில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், கூலி வேலை செய்வோர் என பலர் வீட்டிற்குள் முடங்கியிருப்பதால் ஒரு வேளை உணவிற்கு கூட சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய கல்வி சமூக அபிவிருத்தி நிதியம் ஊடாக நெளுக்குளத்தைச் சேர்ந்த லண்டனில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவரின் நிதி அனுசரணையில் வவுனியா பிரதேச செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட மிகவும் உதவி தேவைப்படும் 20 பேருக்கு தலா 3000 பெறுமதியான உணவுப் பொதிகள் இன்று (01.06.2021) வழங்கி வைக்கப்பட்டன.

இதே போன்று உதவிசெய்ய விரும்புபவர்கள் ஆலய நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.