வவுனியாவில் பயணக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக பொலிசார் முறைப்பாடு பதிவு!!

1460

பயணக் கட்டுப்பாடு..

வவுனியாவில் பயணக் கட்டுப்பாடுகளை மீறி வீதியில் நடமாடுவோருக்கு எதிராக பொலிசார் முறைபாடுகளை பதிவு செய்து அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி அத்தியாவசிய தேவையின்றி வீதிகளில் நடமாடுவோரை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வவுனியா பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா நகரின் முக்கிய பகுதிகளில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிசார் அத்தியாவசிய தேவையின்றி நகருக்குள் பிரவேசிப்பேர், வீதிகளில் நடமாடுவோர் ஆகியோரை மறித்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுவதுடன்,

அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளையும் பதிவு செய்து அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். இதன் காரணமாக வவுனியாவில் மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு நகரம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.