வவுனியா நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து களமிறங்கிய இராணுவத்தினர்!!

4677

களமிறங்கிய இராணுவத்தினர்…

வவுனியா நகரப் பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா நகரின் பிரதான சந்திகள், உள் வீதிகளின் சந்திகள் என்பவற்றில் விசேட கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் வீதிகளில் செல்லும் மக்களை மறித்து தேவையற்ற வகையில் பயணத் தடையை மீறி நடமாடி வருபவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கி வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வருகின்றனர்.

அத்துடன் நகரின் சில பகுதிகளில் இராணுவத்தினருடன் இணைந்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிசார் தேவையற்ற வகையில் பயணத்தடையை மீறி நகரில் நடமாடுவோரை வழிமறித்து அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்தும் வருகின்றனர்.