வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று!!

1940


கொரோனா..


வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (01.06) இரவு வெளியாகின.


அதில் லக்சபான வீதி காத்தார் சின்னக்குளம் பகுதியில் இருவருக்கும், குட்செட் வீதியில் இருவருக்கும், சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் ஒருவருக்கும், இராசேந்திரம்குளம் ஆடைத்தொழிற்சாலையில் ஒருவருக்கும்,


கூமாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், கற்பகபுரம் பகுதியில் ஒருவருக்கும், பூவரசங்குளம் குஞ்சுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் மூவருக்கும்,

தாண்டிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், ராணி மில் வீதியில் ஒருவருக்கும், சின்னப்புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில் ஒருவருக்கும் , கோதாண்ட நொச்சிக்குளம் பகுதியில் ஒருவருக்கும் என 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.