இணையத்தள கடன் மோசடி தொடர்பில் இலங்கை மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!

1291

கடன் மோசடி..

சமூக வலைத்தளம் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை வங்கி தங்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளது. அதில், பேஸ்புக், மெசெனஜர் மற்றும் வட்ஸ்அப் ஆகிய சமூக வலைத்தளம் ஊடாக நிதி மோசடிகள் பல இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.

உடனடி கடன் வசதி வழங்குவதாக கூறி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் பணம் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இதன் மூலம் இடம்பெறுவதாகவும், வாடிக்கையாளர்கள் வழங்கும் தங்கள் கணக்கு தொடர்பான தகவலே இதன் பிரதான பங்கு வகிக்கின்றது.

இதனால் உங்கள் தொலைபேசிக்கு, மின்னஞ்சலிற்கு வங்கியினால் அனுப்பப்படுகின்ற உறுதி செய்யும் கடவுச்சொல் அல்லது ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்படும் கடவுசொற்களை மூன்றாம் நபருக்கு வழங்குவதற்கு தவிர்க்கவும்.

உங்கள் பணத்தை இவ்வாறான தொற்று நோய் காலப்பகுதியில் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.