வவுனியாவில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் மரணம் : இன்று இரண்டாவது மரணம்!!

2252


இன்று இரண்டாவது மரணம்…


வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இன்று (02.06.2021) மரணமடைந்துள்ளார்.குறித்த முதியவர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.


இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் மரணமடைந்துள்ளார்.


வவுனியா சின்னப்புதுக்குளம் பகுதியை சேர்ந்த 76 வயதான முதியவரே மரணமடைந்துள்ளதுடன், அவரது மரணத்துடன் வவுனியாவில் இன்று இரண்டு பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.