ஆயுதங்கள் வைத்திருந்த ஆணும் பெண்ணும் கைது!!

848

Arrestபெட்ரோல் குண்டுகள் மற்றும் கூரிய ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்த பெண் மற்றும் ஆண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை – வலானை குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மீகாவத்தை நாரங்வல பகுதியில் வீடொன்றில் இருந்த இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் 8 பெட்ரோல் குண்டுகள், வாள், வெட்டுக் கத்தி, 5 இரும்புக் கம்பிகள், சிறிய குத்தி, பலகையால் செய்யப்பட்ட போலி துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக இந்த ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று மகர நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.