கர்ப்பமாகுவதனை தவிர்க்குமாறு இலங்கையர்களிடம் கோரிக்கை!!

4324

கர்ப்பம் தரிப்பதனை தவிர்க்க..

தற்போதைய சூழலில் கர்ப்பம் தரிப்பதனை தவிர்க்குமாறு இலங்கை குடும்ப சுகாதார பணியகம் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.  பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் அத்தியாவசியமற்ற முறையில் கர்ப்பம் தரிப்பதனை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளிடம் பெற்றுக் கொள்ள முடியும் என பணியகத்தின் இயக்குனர் விசேட வைத்தியர் சித்தமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பம் முதல் இதுவரையில் உரிய சேவைகள் தொடர்ந்து வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக விசேட வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-