சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்க புதிய கணினி முறை அறிமுகம்!!

633

DLபுதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி ஒன்லைன் மூலம் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும் செயற்திட்டத்தை நாட்டின் பிரதான நகரங்களில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது கொழும்பு, குருநாகல், கம்பஹா மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இப்புதிய திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

நேற்றைய தினம் களுத்துறை மாவட்டதில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதுவரையால் கையால் எழுதி விண்ணப்பித்தவர்கள் இனி கணினி மூலம் விண்ணப்பிக்க முடியும்.

சாரதி அனுமதிப் பத்திரம் விநியோகிக்கும் போது ஏற்படும் காலதாமதத்தை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டம் அமைந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இத்திட்டம் யாழ்ப்பாணம் மற்றும் கண்டியிலும் செயற்படுத்தப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.