வவுனியாவில் மீன் பிடிக்கச் சென்ற 17 வயது இளைஞன் சடலமாக மீட்பு!!

4099

அரசங்குளத்தில்..

வவுனியா மரக்காரம்பளை பகுதியில் அமைந்துள்ள அரசங்குளத்தில் மீன் பிடிக்கச்சென்ற 17வயது இளைஞன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அரசங்குளத்தில் மீன் பிடிக்க சென்ற சமயத்தில் குளத்தினுள் 17வயதுடைய இளைஞன் முழ்கியுள்ளர். அயலவர்கள் உடனடியாக செயற்பாட்டு இளைஞரை மீட்கப் பேராடிய போதிலும் இளைஞன் சடலமாகவே மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் எடுத்துச் செல்வதற்குறிய நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளனர்.