ஆபாசப் படம் எடுத்ததாக புகார் : விளம்பரப் படத்தில் இருந்து பாக்யஸ்ரீ நீக்கம்!!

498

bakiyasriவிளம்பர படத்தில் இருந்து நடிகை பாக்யஸ்ரீ நீக்கப்பட்டார். இவர் சினிமாவில் துணை நடிகையாக இருக்கிறார். உயிருக்கு உயிராக நாடோடி பறவை போன்ற படங்களிலும் நடிக்கிறார். ரவிதேவன் தயாரிப்பில் ராமநாதன் இயக்கும் விளம்பர படமொன்றில் சில தினங்களுக்கு முன் நடித்தார்.

இந்த படத்தில் பாக்யஸ்ரீயை வைத்து ஆபாச காட்சிகளை எடுத்ததாக அவரது தாய் நிர்மலா வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். தாம்பத்திய உறவு சம்பந்தமான மாத்திரை அடங்கிய கவர்ச்சி படம் பொறித்த அட்டை பெட்டியை என் மகள் கையில் கொடுத்து படுக்கை அறைக்குள் அனுப்புவது போல் ஆபாசமாக காட்சிகளை எடுத்ததாகவும் தயாரிப்பாளர், இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டார்.

இதனை தயாரிப்பாளர் ரவிதேவன் மறுத்தார். ஆபாச காட்சிகளை படமாக்கவில்லை என்றும் மும்பை நிறுவனம் ஒன்றுக்காக இந்த படத்தை எடுத்ததாகவும் படுக்கை அறைக்கு டம்ளரில் பால் கொண்டு செல்வதற்கு பதில் அந்த நிறுவனம் தயாரித்த மாத்திரைகளை எடுத்து செல்வது போல் காட்சிகளை எடுத்ததாகவும் தெரிவித்தார். போலீசாரிடமும் இந்த படத்தை திரையிட்டு காட்டினார்.

இந்த நிலையில் விளம்பர படத்தில் இருந்து பாக்யஸ்ரீ நீக்கப்பட்டார். அவர் நடித்த காட்சிகளும் நீக்கப்பட்டன. பாக்யஸ்ரீக்கு பதில் வேறு நடிகையை வைத்து படப்பிடிப்பு நடத்தப் போவதாக ரவிதேவன் கூறினார். இருபத்தைந்து வருடம் சினிமாவில் இருக்கும் என் மீது பொய் குற்றச்சாட்டு மூலம் அவதூறு ஏற்படுத்தி விட்டனர். இதனால் மனம் மிகவும் காயப்பட்டு விட்டது. இனிமேலும் பாக்யஸ்ரீயை வைத்து இந்த படத்தை எடுக்க முடியாது எனவே அவருக்கு பதில் வேறு நடிகையை தேர்வு செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.