நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த ஆலோசனை?

2503

ஊரடங்கு…

பயணத் தடை அமலாக்கலாம் கொரோனா வைரஸ் பரவல் குறையாமல் இருப்பதை கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. கொழும்பில் நேற்று (06.06) இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு காணப்படுகின்ற போதிலும், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையாது, நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமை தொடருமாக இருந்தால், எதிர்வரும் சில தினங்களில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடும் கட்டுப்பாடுகளுடனான ஊரடங்கு சட்டத்தை இரு வாரங்களுக்கு அமலாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாடுகளில் கொரோனா தொற்று குறைவடைந்தமை தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை இங்கு முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில், ஊரடங்கை பிறப்பிப்பது குறித்து, ஜனாதிபதியின் கவனத்திற்கு இன்று கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில், உடனடியாக ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகின்றது.

-தமிழன் பத்திரிகை செய்தி-