வவுனியாவில் தனியார் நிதி நிறுவனங்களை சேர்ந்த 45 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!!

3034


பி.சி.ஆர் பரிசோதனை..


வவுனியாவில் தனியார் நிதி நிறுவனங்களை சேர்ந்த 45 பேருக்கு இன்று (08.06.2021) பி.சி.ஆர் பரிசோதனைகள் சுகாதார பிரிவினரினால் மேற்கொள்ளப்பட்டன.வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் பயணத்தடை காலப்பகுதியில் இயங்கிய தனியார் நிதி நிறுவனங்கள் சுகாதார பிரிவினராலும் பொலிஸாராலும் சோதனை மேற்கொள்ளப்பட்டன.


இதன் போது குறித்த நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மக்களுடன் தொடர்புகளை பேணுவதினால் அந் நிறுவன ஊழியர்கள் 45 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.


வவுனியா பசார் வீதியில் இரண்டு நிதி நிறுவனங்களும், முதலாம் குறுக்குத்தெருவில் இரண்டு நிதி நிறுவனங்களும், புகையிரத நிலைய வீதியில் ஒரு நிதி நிறுவனமும் என 5 நிதி நிறுவனங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையுடன் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் பின்னரே மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.