பயணக்கட்டுப்பாடு இந்த மாத இறுதி வரை தொடரலாம்!!

4335


பயணக்கட்டுப்பாடு..


இன்று அல்லது நாளை கூடுகிறது கொவிட் தடுப்பு செயலணி.
பயணக் கட்டுப்பாட்டை இந்த மாத இறுதி வரையிலாவது தொடர்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் தொற்று நில வரத்தை பார்க்கும் போது பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவது நல்லது அல்ல என்று சுகாதார தரப்பினர் கூறுகின்றனர்.அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் விசேட மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினர் தொற்று நிலைமை குறைவடையும் வரையில் கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டாம் என்றே கூறி வருகின்றனர்.


இதன்படி மே 21 ஆம் திகதி முதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் தொடர்வதற்கு இதுவரையில் தீர்மானிக்கப்பட்டுள்ள போதும் அதனை மேலும் நீடிக்க வேண்டும் என்றே அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இதன்படி இந்த விடயம் தொடர்பாக இன்று அல்லது நாளைய தினத்தில் கோவிட் தடுப்பு செயலணி கூடி தீர்மானம் எடுக்கவுள்ளது. ஜுன் 21 ஆம் திகதி வரையில் கட்டுப்பாட்டை நீடிப்பதற்கு இதன்போது தீர்மானம் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  அத்துடன் நிலைமையை ஆராய்ந்து அதன் பின்னர் பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பாக அறிவிக்கப்படும்.

-யாழ் தினக்குரல்-