13 நாட்களில் 500 பேர் கொரோனா தொற்றால் மரணங்கள்!!

266


கொரோனா…


கொரோனா தொற்றால் முதல் 500 பேர் உயிரிழப்பதற்கு 343 நாள்கள் சென்றன. அடுத்த 500 பேர் உயிரிழப்பதற்கு 72 நாள்கள் சென்றன. மூன்றாவது 500 பேர் உயிரிழப்பதற்கு வெறும் 13 நாள்களே சென்றுள்ளன.உயிரிழப்புக்கள் வீரியமாகி வருவதை பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் தெரிந்துகொள்ளவேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.


இது தொடர்பில் அந்தச் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்ததாவது, கோவிட் தொற்று 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் பரவ ஆரம்பித்தது.


அன்றிலிருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் தொற்றால் உயிரிழப்பு வீதம் 46.6 ஆகக் காணப்பட்டது. ஆனால், அது மே மாத இறுதியில் 53.4 வீதமாக அதிகரித்துள்ளது. இது மிகவும் ஆபத்தான போக்கு. மே மாதத்தில் மாத்திரம் 947 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன” – என்றார்.