கொரோனா மரணங்களை குறைக்க அதீத முயற்சிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் : இராணுவத் தளபதி!!

426


கொரோனா..


கோவிட் தொற்றின் உயிரிழப்பைக் குறைக்க சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அதீத முயற்சி செய்வதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இலங்கை முதலீட்டு சபையின் இணைய வழி செயலமர்வின் 2 வது நாள் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


பாதிக்கப்பட்ட அனைத்து தொற்றாளர்களுக்கும் உயிரைக் காப்பாற்றுவதற்கான சிறந்த சிகிச்சைகள் மற்றும் வசதிகளை வழங்க முடிகின்றது. அரசாங்கத்தின் முக்கிய இலக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் முழு தீர்வையும் உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.