14ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் : இராணுவத் தளபதி அறிவிப்பு!!

2835

பயணக்கட்டுப்பாடு…

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை 14ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும். இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

மேலும், பயணக்கட்டுப்பாடு 14ஆம் திகதி தளர்த்தப்படாமல் தொடர்ந்து நீடிக்கப்படும் என வெளியாகி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மாதம் 21ம் திகதி முதல் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வரும் நிலையில் 25ம் திகதிமுதல் தொடர்ச்சியாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பித்தக்கது.