உணவு உண்ணும் போது அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்த நபர் : அதிர்ச்சிக் காரணம்!!

606


இந்தியாவில்..



எந்த வ.லி.யும் தெரியாமல் இறப்பதற்கான எந்த ஒரு அடையாளமும் இன்றி ஒரு மனிதர் உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே மரணித்தார். சைலண்ட் மயோகார்டியல் இன்பார்க்சன் காரணமாக உட்கார்ந்து உட்கார்ந்தபடியே அதே இடத்தில் உயிரிழந்தார்.



மேதக் மாவட்டம் தூப்ரான் கிராம எல்லையில் இந்த சம்பவம் நடந்தது. உட்கார்ந்து உட்கார்ந்தபடி உள்ளார்… சாப்பிட்டபடியே உள்ளார்… ஆனால் உயிரிழந்துள்ளார். இந்த வினோதமான நிகழ்ச்சி குறித்து கிராம மக்கள் ஆச்சரியமும் சோகமும் கொண்டுள்ளார்கள்.




இந்த படத்தில் தெரியும் மனிதர் அப்படியே உயிரிழந்தார். சப்பாத்தியை சாப்பிடுவதற்காக அதன் மீது வைத்த கை அப்படியே இருக்கிறது. உட்கார்ந்தபடியே வாயிலிருந்து ர.த்.தம் ஒழுகியபடி மரணம் அடைந்தார்.


இந்த விஷயம் குடும்ப அங்கத்தினர்களுக்குத் தெரிவதற்கு சுமார் 24 மணி நேரம் ஆனது. அதற்குள் அதே நிலையில் கட்டையைப் போல் சடலம் இறுகிவிட்டது. இவர் சித்தி பேட்டை மாவட்டம் வர்கல் மண்டலம் துண்டுபல்லியைச் சேர்ந்த காசால சாயிலு (46).

வியாழனன்று மதியம் மேதக் ஜில்லா மனோகராபாத் மண்டலம் பாலட கிராமத்தில் ஒரு உறவினரின் அந்திமக் கிரியையில் பங்கு கொண்டார். அதே நாள் தூப்ரான் வழியாக சொந்த கிராமத்துக்கு செல்லுகையில் அல்லாபூரில் ம.து.வு.ம் உணவு பொட்டலமும் வாங்கிக் கொண்டு தூப்ரான் -கஜ்வேல் சாலை அருகில் சற்று தூரத்தில் அமர்ந்து உண்பதற்காக கையை உணவில் வைத்த சாயிலு மாரடைப்பால் அதே நிலையில் இறந்து போனார்.


எத்தனை நேரம் கழிந்தாலும் அவர் வீட்டிற்கு திரும்பாததால் குடும்ப அங்கத்தினர்கள் வெள்ளிக்கிழமை போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் மற்றும் குடும்ப அங்கத்தினர்கள் தேடி வருகையில் சாலையருகில் அமர்ந்தபடியிருந்த சாயிலுவின் ச.டலத்தை கண்டனர்.

விவசாயம் செய்துவரும் சாயலுவுக்கு குழந்தைகள் இல்லை. இந்த சம்பவம் குறித்து தூப்ரான் சமூக ஆரோக்கிய நிலையம் சூப்ரவைசர் அமர்சிங் கூறியபோது சைலண்ட் மயோகார்டியல் இன்பார்க்சன் காரணமாக மாரடைப்பு வந்திருக்கலாம் என்றும் இதில் வ.லி.யோ வேறு ஏதும் அடையாளங்களோ இல்லாமலேயே உயிர் பிரிந்துவிடும் என்றும் விவரித்தார்.