வவுனியா வாடி வீடு வளவுக்குள் நுழைவதற்கு நகரசபையால் தடை விதிப்பு : பொலிஸில் முறைப்பாடு!!

1361


வாடி வீடு..


வவுனியா வாடி வீடு வளவுக்குள் நுழைவதற்கு நகரசபையால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை நடத்தி வருபவர்களால் நகரசபைக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள வவுனியா வாடி வீட்டினை நடாத்தி வந்த கதிர்காமராஜா அண்மையில் மரணமடைந்த நிலையில், அவரது குடும்பத்தினரின் பராமரிப்பின கீழ் வாடி வீடு உள்ளது. இந்நிலையில் வாடி வீட்டு வளாகத்திற்குள் உள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக நகரசபையால் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.


நகரசபை குறித்த வாடி வீட்டு நிர்வாகத்தில் தலையிட முடியாது எனவும் அவர்களது நடவடிக்கைக்கு தீர்வைப் பெற்றுத் தருமாறும் அதனை நடாத்தி வருபவர்களால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில், வவுனியா வாடி வீடானது நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ளது. இதனை பல ஆண்டுகளாக நாமே நடத்தி வருகின்றோம்.

தற்போது எந்தவித முன்னறிவித்தலும் இன்றி வவுனியா நகரசபையின் உள்நுழைய தடை என ஒட்டியுள்ளனர். இது தொடர்பில் வவுனியா பொலிசில் நகரசபைத் தலைவருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தனர்.