வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரின் பழைய மாணவர் சங்கக்கூட்டம்!!

919

Saivaparakasa

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் பழைய மாணவர்கள் சங்கக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நாளை மறுதினம் (23.03) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் செல்வி உமாராசையா தலைமையில் நடைபெறவுள்ளது.

பாடசாலையின் வளர்ச்சி, மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதுடன் 2014ம் ஆண்டிற்குரிய பழைய மாணவர் சங்க நிர்வாகத் தெரிவும் இடம்பெறவுள்ளது.

இக் கூட்டத்திற்கு சைவப்பிரகாச கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு பாடசாலை அதிபர் வேண்டுகோள் விடுக்கின்றார்.