21ம் திகதி பயணத்தடை நீக்கம் தொடர்பில் நாளை தீர்மானம் : இராணுவத் தளபதி!!

1551

பயணத்தடை..

இலங்கையில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டுக்காக நடைமுறைப்படுத்தப்படும் பயண தடைகள் தொடருமா அல்லது நீக்கப்படுமா என்பது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 பணிக்குழு நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து தற்போதைய நிலைமையை மறு ஆய்வு செய்யும் போது இது தொடர்பான முடிவெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள், திங்கள்கிழமை (21) அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்பட உள்ளன.

-தமிழ்வின்-