சக்திதாஸ் தனுஸ்காந்..
வவுனியா நகரசபை புதிய உறுப்பினராக சக்திதாஸ் தனுஸ்காந் நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா நகரசபையில் கடந்த உள்ளுராட்சி தேர்தலின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தை பெற்றிருந்தது.
இவ் ஆசனமானது சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் நகரசபை உறுப்பினர் ஜானுஜன் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து அவ்விடத்துக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளருமான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் சக்திதாஸ் தனுஸ்காந் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவனும், கணணியியல் பட்டதாரியும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனின் பிரத்தியேக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.